புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் நடந்தது விபச்சாராம?
நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது
வள்ளிபுனம் பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நான்கு பெண்கள் ஆண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் 80(mg) மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வள்ளிபுனம் பகுதியில் நடப்பது என்ன விபச்சாரமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை.. போதைப்பொருள் (ஐஸ்) வைத்திருந்த குற்றத்திற்காகவே பிரதானமாக நடத்தப்பட்டுள்ளது.
எனினும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளூர் அல்லாத ஒரு பகுதியில் தங்கியிருந்ததும், அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும் இப்பகுதியில் விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் நெட்வொர்க் இணைந்து இயங்குகிறதா என்ற பலத்த சந்தேகத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

