8,500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதுக்குடியிருப்பில் நவீன தபால் அலுவலகம்!

8,500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதுக்குடியிருப்பில் நவீன தபால் அலுவலகம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் ரூ. 32 மில்லியன் முதலீட்டில் அமையவுள்ள புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

இதுவரை வாடகை இடங்களில் இயங்கி வந்த இந்த அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதன் மூலம், அப்பகுதியிலுள்ள சுமார் 8,500 குடும்பங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சீரான சிறந்த சேவையைப் பெற வழிவகுக்கும்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், கட்டுமானப் பணிகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin