புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் அறிவித்தல்.
புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சனத்தொகை அதிகம் கொண்ட பிரதேசம்.
இங்கே 2018 ஆம் கொடுக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டங்கள் 1308 வரை உள்ளன. 8 வருடங்களாக இவற்றுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை.
2026 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட வீட்டுத்திட்டங்களில் கீழ் வரும் பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1. 2026 இல் முழுவதுமாக முடிக்கப்படாத NHDA வீடுகள் – 1094
2. 2026 முதலாம் கட்டம் வழங்கப்பட்ட NHDA வீடுகள் – 14
3. 2026 இரண்டாம் கட்டம் வழங்கப்பட இருக்கும் NHDA வீடுகள் – 45
4. 2026 இல் Palmera நிறுவனத்தினால் வழங்கப்பட உள்ள NHDA வீடுகள் – 35
5. பிரதேச செயலகத்தினால் 2026 இல் வழங்கப்பட இருக்கும் NHDA வீடுகள்-267 (5 அங்கத்தவர்களுக்கு மேற்பட்ட முடிக்கப்படாத வீடுகள் மற்றும் 4 அங்கத்தவர்களின் ஜன்னல் வரிக்கு மேற்பட்ட முடிக்கப்படாத வீடுகள்)
6. இவ் வருடம் வழங்கப்பட இருக்கும் மொத்த NHDA வீடுகள் – 361
7. எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் NHDA வீடுகள் – 733
மேலும் 473 தற்காலிக வீடுகள் பாதிக்கப்பட்ட அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
மொத்தம் இது வரையில் 834 வீடுகள் 2026 இல் வழங்கப்பட உள்ளது.
மீள் குடியேற்றம் நடைபெற்ற காலத்தினை தாண்டி மிக அதிகளவான வீடுகள் இவ் வருடமே பிரதேச செயலகத்தின் முயற்சியினால் அரசினால் மற்றும் அரச சார்பற்ற நிருவனத்தினால் வழங்கப்பட இருக்கின்றது.
எனினும் சிலர் குட்டையை குழப்பி மக்களை திசை திருப்ப நடவடிக்கை எடுத்து பாதிப்படைய வைக்கின்றனர் என்பதை மனவருத்ததோடு அறியத்தருகின்றேன்.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
புதுக்குடியிருப்பு.

