உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% மேல் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% மேல் அதிரடி உயர்வு!

ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 4% க்கும் மேலாக சடுதியாக உயர்ந்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 4.02 டொலர்கள் (4.3%) அதிகரித்து 97.11 டொலர்களாகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 3.90 டொலர்கள் உயர்ந்து 94.44 டொலர்களாகவும் பதிவாகியுள்ளன.

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் முடிவுக்கு வரும் என்ற உலக நாடுகளின் எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சமே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin