கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை கடற்படையின் ‘கஜபாகு’ கப்பல் இந்தியா பயணம்!

கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை கடற்படையின் ‘கஜபாகு’ கப்பல் இந்தியா பயணம்!

இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது ‘பிம்ஸ்டெக்’ கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் (BIMSTEC Maritime Security Exercise) பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘கஜபாகு’ (Gajabahu) போர்க்கப்பல் இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

 

இந்த விசேட கடல்சார் பயிற்சியானது ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 03ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

பிம்ஸ்டெக் பிராந்திய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin