பாகிஸ்தான் சுப்பர் லீக் – செம்பியன் பட்டத்தை வென்றது பெஷாவர் சல்மி அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பெஷாவர் சல்மி (PESHAWAR ZALMI) அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லாகூரில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் பெஷாவர் சல்மி மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மென் (Hyderabad Kingsmen) ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெஷாவர் சல்மி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் கிங்ஸ்மென் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

 

இந்தநிலையில் 130 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெஷாவர் சல்மி அணி 15.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இதன்படி 2026ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பெஷாவர் சல்மி அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin