இளவாலையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி!

இளவாலையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி!

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழுந்த 19 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கடந்த மே 1, 2026 அன்று பதிவாகியுள்ளது.

ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

அவர் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், தவறுதலாக கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதையடுத்து மீட்கப்பட்ட அவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு வருகிறார்.

Recommended For You

About the Author: admin