இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க.! 

இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க.!

ஐநாவில் பாகிஸ்தான் முகத்திரை கிழிப்பு. நடுங்கிப்போன பாக். பிரதிநிதி. பதில் சொல்ல முடியாமல் தவிப்பு..!!!

உலக அரங்கில் இஸ்லாமியர்களின் காவலன் என வேடமிடும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கிழித்தெறிந்தது.

 

இந்தியாவின் ஆக்ரோஷமான வாதங்களால் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தனர்.

 

சர்வதேச மேடைகளில் இந்தியாவுக்கு எதிராக ‘இஸ்லாமோபோபியா’ (இஸ்லாமியர்களுக்கு எதிரான பயம்) என்ற கற்பனைக் கதைகளை பரப்புவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைத்து, அதன் மூலம் உலக நாடுகளிடம் அனுதாபத்தைப் பெற்று நிதி திரட்டுவதே பாகிஸ்தானின் நோக்கம் என இந்தியா சாடியது.

 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பி. ஹரீஷ், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியதாவது, “பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையை விட, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான (சுமார் 20 கோடி) இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகவும், எவ்வித மதப் பாகுபாடுமின்றி அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் கண்டு பாகிஸ்தானுக்குத் தான் பயம் ஏற்பட்டுள்ளது.:

 

இஸ்லாமியர்களின் ‘மசிஹா’ (இரட்சகன்) எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான், ரமலான் மாதத்தில் கூட ஆப்கானிஸ்தான் மக்கள் மீதும், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்துவதை இந்தியா சுட்டிக்காட்டியது. பாகிஸ்தானில் உள்ள அகமதியாக்கள் மற்றும் பிற சிறுபான்மை இஸ்லாமியப் பிரிவினர் நடத்தப்படும் விதம் குறித்து விவாதிக்க வேண்டாமா? அங்குள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் ஏன் மௌனம் காக்கிறது? ஆப்கானிஸ்தான் குடிமக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதும், அவர்களின் சொத்துக்களைப் பறிப்பதும் எந்த வகையான நீதி? என கேள்வி எழுப்பினார்.

 

இந்தியாவின் இந்தத் தொடர் கேள்விகளாலும், ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட வாதங்களாலும் பாகிஸ்தான் அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர். மேலும் பாகிஸ்தானின் பொய்ப் பிரச்சாரம் உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை எடுபடாமல் போனதுடன், அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான விரோதப் போக்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin