ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! – போலி செயலி மூலம் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பெயரில் போலியான செயலியை உருவாக்கி வங்கி கணக்குத் தகவல்களைத் திருடிய விவகாரத்தில் குற்றப்புலனாய்வுத் துறை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

விமானக் பயணச்சீட்டு முன்பதிவுக்கு 50 சதவீத சலுகை அளிப்பதாகக் கூறி, நிறுவனத்தின் லோகோ மற்றும் பெயரைப் பயன்படுத்தி இந்த போலி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

 

செயலியில் பதிவு செய்வதற்கு ஆரம்பக் கட்டணமாக ரூ. 250 வசூலிக்கப்பட்ட நிலையில், பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களும் திருடப்பட்டுள்ளன.

 

இவ்வாறு பெறப்பட்ட ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல மில்லியன் ரூபாய் திருடப்பட்டுள்ளதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

தங்கள் வங்கிக் கணக்குகள் ஊடுருவப்பட்டதை அறியாத பாதிக்கப்பட்டவர்கள், போன் அதிகளவில் சூடாவதையும் பேட்டரி விரைவில் தீர்வதையும் மட்டுமே கவனித்துள்ளனர்.

 

இந்த நிதி மோசடிக்கு உடந்தையாகத் தங்களது வங்கிக் கணக்குகளை பணத்திற்காக விற்பனை செய்த பல இலங்கையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தப் போலி செயலியை இயக்கி பின்னணியில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரிகளைக் கண்டறிந்து கைது செய்ய தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

உத்தியோகபூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆப் ஸ்டோர் தவிர்த்து பிற போலி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin