மத்திய கிழக்கில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

மத்திய கிழக்கில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கத்தாரில் உள்ள Al Udeid விமானப்படை தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை (500 Fifth Fleet) தளங்களிலிருந்து நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

ஈரான் மீதான தாக்குதல் தொடங்கினால், பதிலுக்கு ஈரான் அமெரிக்கத் தளங்களைக் குறிவைக்கும் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுத பலத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஜூன் 2025-ல் நடந்த மோதல்களின் தொடர்ச்சியாக, தற்போது ஒரு நேரடிப் போருக்கான சூழலை இஸ்ரேல் உருவாக்க துடிக்கின்றது.

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் ஒரு உடன்பாட்டிற்கு வர 10 முதல் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் என்று டிரம்ப் கடந்த வாரம் எச்சரித்திருந்தார். “மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்ற அவரது பேச்சு, தாக்குதல் உறுதி என்பதையே காட்டுகிறது.

எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் எங்களின் இலக்குகளாக மாறும்” என்று ஈரான் ஐநா சபையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாங்கள் போருக்கும் தயார், அமைதிக்கும் தயார். ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டால் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி.

தற்போது 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள், அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தவிர்க்க முடியாதது என்பதையே உணர்த்துகின்றன.

அமெரிக்கா தன் வாழ்நாளில் சந்திக்காத அவமானம் ஒன்றை சந்திக்கப் போகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

நம்பகமான சர்வதேச அரசியல், ராணுவ செய்திகள் மற்றும் முக்கிய உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள..

Recommended For You

About the Author: admin