பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்..!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்..!

தீர்மானம் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தக் கூடாது எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (19) பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.

 

இதன்போது சபை உறுப்பினர்களான சிவபாதம் குகனேசன் மற்றும் குமாரவேலு அகிலன் ஆகியோரால் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தக் கூடாது என பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

 

குறித்த தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

21 உறுப்பினர்களை கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 3 உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கவில்லை வருகைத்தந்த 18 உறுப்பினர்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க ஏனைய 14 பேரும் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து பிரேரணையை நிறைவேற்றியிருந்தனர்.

Recommended For You

About the Author: admin