ஐரோப்பா போருக்கு தயாராகிறதா? பிரான்ஸில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சி ஆரம்பம்!
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது வரலாற்றில் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் ஒன்றான ‘ஓரியன் 26’ (Orion 26) ஐ ஆரம்பித்துள்ளது.
பல மாதங்கள் நீடிக்கவுள்ள இந்தப் பயிற்சியில், ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்கள், கடற்படை மற்றும் வான்படை பிரிவினர் ஒருங்கிணைந்து ஈடுபடவுள்ளனர்.
நவீன காலப் போ*ர்க்களச் சவால்களான சைபர் தாக்குதல்கள், வான்வழித் தற்காப்பு மற்றும் பெரிய அளவிலான மோதல்களை எதிர்கொள்வதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளின் கூட்டு இராணுவ வலிமையை நிரூபிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போ*ர் மற்றும் ரஷ்யாவின் நகர்வுகளால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், பிரான்ஸின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இராணுவ ரீதியாகத் தன்னிறைவு பெறுவதையும், அவசர காலங்களில் விரைவாகச் செயல்படும் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த ‘மெகா’ பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

