கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை – வெளிநாடுகளில் இருந்து சென்றவர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பல நாடுகளில் இருந்து சென்ற பயணிகள் வெளியெற முடியாமல் தவித்துள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டது.
பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் இருந்த இலங்கை சென்றவர்கள் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் அதிகாரிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக சில மணி நேரங்களில் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
அதுவரையான காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வெளிநாட்டு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

