சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் கேசினோ திறப்பு விழாவிற்கு ஷாருக்கான் வரமாட்டார்

சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் கேசினோ திறப்பு விழாவிற்கு ஷாருக்கான் வரமாட்டார்

ஆகஸ்ட் 2 ஆம் திகதி திறக்கப்படவுள்ள சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் நட்சத்திர ஹோட்டலின் கேசினோ திறப்பு விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வரமாட்டார் என சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்களது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயத்தை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முகநூல் பதிவின்படி, ஷாருக்கான் இதற்கு முன்னர் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதென அவர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin