ரியாத் தாக்குதலுக்கு டிரம்ப் கண்டனம்: சவூதி இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்
சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தாம் பேசவுள்ளதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“சவூதி அரேபியாவில் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

