மனுஷன் போல வேடமிட்டு காவல் துறைக்கு போலி கொலைத் தகவலை அனுப்பிய Anthropic AI!!

மனுஷன் போல வேடமிட்டு காவல் துறைக்கு போலி கொலைத் தகவலை அனுப்பிய Anthropic AI!!

பிலடெல்பியா காவற்துறை கடும் கண்டனம்!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான Anthropic-இன் AI மாதிரி (AI model), மனிதனைப் போன்று நடித்து

பிலடெல்பியா காவற்துறைக்கு போலியான கொலைத் தகவல் ஒன்றை அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைச் சம்பவம் ஒன்றைப் பற்றி நன்கு அறிந்த ஒரு மனிதர் தகவல் தெரிவிப்பது போல,

ஜோடிக்கப்பட்ட தகவல்களை குறித்த AI மாதிரி காவற்துறையின் இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளது என பிலடெல்பியா காவற்துறை தெரிவித்துள்ளது.

Anthropic நிறுவனத்தின் விளக்கத்தின்படி, அதன் AI மாதிரி சீரற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட இணையதளங்களில்

தானியங்கிப் பரிசோதனையை (automated test) மேற்கொண்டிருந்தபோது, கடந்த ஜூலை 18 ஆம் திகதி இத்தவறான தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தாமதமாகத் தெரிவித்த நிறுவனம் – காவற்துறை அதிருப்தி:

குறித்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னரே, அதாவது செப்டெம்பர் 28 ஆம் திகதியே Anthropic நிறுவனம் இந்தத் தவறைத் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தொடர்ந்து, ஒக்டோபர் 7 ஆம் திகதியே இது குறித்து காவற்துறைக்குத் தகவல் வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டறிந்து நகர அதிகாரிகளிடம் அறிவிப்பதில் ஏற்பட்ட இரு மாத கால தாமதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என காவற்துறைத் திணைக்களம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, AI சமர்ப்பித்த இந்தத் தகவல் தொடக்கத்திலேயே தேவையற்ற மின்னஞ்சலாக/ஸ்பேமாக (Spam) அடையாளப்படுத்தப்பட்டதால், புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட போலித் தகவல் ஸ்பேம் பிரிவுக்குச் சென்றதால், தேவையற்ற புலனாய்வு நடவடிக்கைகளோ அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்போ ஏற்படவில்லை.

எனினும், தானியங்கி முறையில் இயங்கும் அதிநவீன AI தொழில்நுட்பங்கள் மனித தலையீடின்றி சட்ட அமலாக்க அமைப்புகளின் பொதுத் தளங்களை தவறாகப் பயன்படுத்துவது தொழில்நுட்ப உலகில் கடுமையான பாதுகாப்புக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Recommended For You

About the Author: admin