மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தினைப் பாதிக்கும்
இந்த பாரிய திட்டங்களைத் தீவிற்குள் முன்னெடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று (29.01) புதன்கிழமை,காலை 9.30 மணியளவில் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் CEJ நிறுவனத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர்.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக இந்த விடயம் குறித்து எம்முடன் இணைந்து கடமையாற்றி வருகிறது.
மக்களைப் பாதிக்கும் இரண்டு பாரிய திட்டங்களை அதாவது கனிய மண்ணகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை மன்னார் தீவுக்குள் நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அதனை தீவிற்கு வெளியே
மக்களின் வாழ்விடங்களை பாதிக்காத வகையில் பெரு நிலப்பரப்புகளில் முன்னெடுக்க முடியும்
மேலும் கணிய மணல் அகழ்வை நாங்கள் முற்று முழுதாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கின்றோமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த CEJ நிறுவனத்தின் இயக்குனர், ஹேமந்த விதானகே,
‘மன்னார் தீவினில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த கனிய மண்ணகழ்வு மற்றும் காற்றாலை திட்டத்தினால் கடல் நீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் காணப்படுகிறது. இதனால் மன்னார் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்த திட்டங்களானது மன்னார்த் தீவில் வாழும் மக்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது
எனவே இந்த திட்டங்கள் இரண்டும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட குழுவினர் நேற்று (28.01) செவ்வாய்க்கிழமை மன்னாரிற்கு வருகை தந்து, மன்னார்த் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண்ணகழ்வு இடம் பெறுகின்ற பகுதிகளுக்கு கள விஜயத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.