இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு.!

இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு.!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகும் என தெரியவந்துள்ளது.

15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர் சமூகத்தினரிடையே இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் 55 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 48 ஆண்களும் 6 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குகின்றனர்.

அத்துடன் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்குள் எய்ட்ஸ் நோய் காரணமாக ஏற்பட்ட 8 மரணங்கள் பதிவாகியுள்ளன என அந்த அறிக்கையில் கூறபடுள்ளது.

Recommended For You

About the Author: admin