போலி வங்கி அதிகாரியின் தொலைபேசி அழைப்பு! 70 வயது முதியவரிடம் ரூ. 46 இலட்சம் மோசடி!
இலங்கையில் வங்கி அதிகாரி போல் தொலைபேசியில் பேசி, 70 வயதுடைய முதியவர் ஒருவரிடமிருந்து ரூ. 46 இலட்சம் பணத்தை மோசடிக்காரர்கள் கொள்ளையிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் அமிலா பெர்னாண்டோ என்பவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்தச் சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது தந்தைக்கு தனியார் வங்கியின் சார்பில் வரிக் கணக்கீடு செய்வதாகக் கூறி ஒருவர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதனை நம்பிய அவரது தந்தை, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் OTP குறியீடுகளை வழங்கியுள்ளார்.
இதனைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 46 இலட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே வாரத்தில் இதுபோன்ற மேலும் இரண்டு மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
⚠️ பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
🔴 வங்கி அதிகாரிகள் எனக் கூறி அழைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
🔴 OTP, PIN மற்றும் வங்கிக் கடவுச்சொற்களை எவரிடமும் பகிர வேண்டாம்.
🔴 வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தொலைபேசி ஊடாக இத்தகைய இரகசியக் குறியீடுகளைக் கோருவதில்லை.
🔴 சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அழைப்பைத் துண்டித்து, வங்கியின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளுங்கள்.
🙏 குறிப்பாக முதியவர்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்க இந்தத் தகவலை அனைவரிடமும் பகிருங்கள்!
ஒரு OTP குறியீடு… உங்கள் வாழ்நாள் சேமிப்பையே இழக்கச் செய்யலாம்!

