தலைமன்னார் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்

குடிமனைகள் வாழும் பகுதியில் பனைமரக்கூடல் கொண்ட காட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டதால் அயலில் குடியிருந்த மக்கள் அச்சம் கொண்டபோதும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பினால் தீ அயல் வீடுகளுக்கும் காட்டுக்குள்ளும் மேலும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவம் செவ்வாய் கிழமை (18.08.2026) காலை எட்டு மணியளவில் தலைமன்னார் கிராமம் வடக்கு சிலுவை நகர் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் அன்று பனைகள் செறிந்துள்ள குடிமனைகள் அமைந்துள்ள பகுதியில் பனைகூடல் ஒன்றில் தீ எரிந்ததைக் கண்ட அயலவர்கள் அத்தீயை அனைக்க முற்பட்டதுடன் விடயம் தெரிந்ததும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இத்தீ காடுகளுக்கும் அயல் வீடுகளுக்கும் பரவாதிருக்க உடன் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அக்கிராமத்தின் பொது மக்கள் இத்தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததுடன் இராணுவம் கடற்படையினர் மற்றும் பொலிசாரும் உடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை அவதானித்து தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
இதனால் அனர்த்த முகாமைத்துவ தரப்பினரின் ஒருங்கணைந்த செயற்;பாட்டின் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு நிலமை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin