கல்முனை மாநகர சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

கல்முனை மாநகர சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்: பொதுமக்களின் கருத்துக்களைக் கோருகிறது!

கல்முனை மாநகர சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகர மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைகளை உள்வாங்கி, மாநகரின் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், மாநகர சபையின் வருமான மூலங்களை மேம்படுத்தும் நோக்கிலும் இவ்வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

 

இதற்கமைய, பொதுமக்கள், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ள மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன் ஒரு கட்டமாக, பொதுமக்களின் பங்களிப்புடன் கலந்தாலோசனைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, மாநகரின் எதிர்கால அபிவிருத்தி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வரவு – செலவுத் திட்ட முன்னுரிமைகள் தொடர்பில் தங்களது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைக்குமாறு பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

 

கூட்ட விபரங்கள்:

 

திகதி: 05.11.2026 (வியாழக்கிழமை)

இடம்: கல்முனை மாநகர சபையின் கூட்ட மண்டபம்

நேரம்: மு.ப. 10.00 மணி

 

மக்களின் குரல் ஒலிக்கட்டும்; மக்களின் தேவைகள் திட்டங்களாக மாறட்டும்!

 

கல்முனை மாநகரின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத் தயாரிப்பில் பொதுமக்களின் பங்களிப்பும் கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுவதால், ஆர்வமுள்ள அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: admin