இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணி பயிற்சியில்

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட வோர்ன் – முரளி கிண்ண தொடரில் ஆடுவதற்காக அவுஸ்திரேலிய அணி டுபாயில் ஒரு வாரம் பயிற்சி பெற்ற பின் இலங்கையை வந்தடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இலங்கை வந்த ஆஸி. வீரர்கள் நேராக இரண்டு போட்டிகளும் நடைபெறும் காலியை நோக்கி பயணித்துள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கழமை அதிகாலை 2 மணிக்கே காலியை அடைந்தனர்.

சனிக்கழமை பிற்பகல் காலி சர்வதேச மைதானத்தில் அவுஸ்திரேலிய அணி பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் நிரந்தர தலைவரான பட் கமின்ஸ் தனது மனைவியின் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலேயே ஆஸி. அணியினர் இலங்கை வந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (29) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் பெப்ரவரி 6 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலிய குழாம்: ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட் (உப தலைவர்), ஷோன் எபட், உஸ்மான் கவாஜா, சேம் கொன்ஸ்டாஸ், மானஸ் லெபுஷேன், நெதன் லயன், செதன் மக்ஸ்வீன், அலெக்ஸ் கேரி, மிச்சல் ஸ்டாக், ஸ்கொட் போலன்ட், கூபர் கொனலி, ஜோஷ் இங்லிஷ், மத்தியூ குனேமன், டொட் மர்பி மற்றும் பியு வெப்ஸ்டர்.

Recommended For You

About the Author: admin