டக்ளஸ் தேவானந்தா மீதான பிடியாணை இரத்து

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று(25.11.2024) நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த நிலையில் பிடியாணை இரத்து செய்யப்பட்டது.

தனியார் வர்த்தகர் ஒருவருக்கு  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய காசோலை மோசடி தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்றில் ஆஜராகாத நிலையில், நீதிவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே டக்ளஸ் தேவானந்தா இன்று மன்றில் ஆஜராகிய நிலையில் பிடியாணை இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: RK JJ