மழை வெள்ளத்தினால் முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட, ரிஷார்ட் எம்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கு அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு. மன்னார்,அரசாங்க அதிபர், க. கனகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (25.11) திங்கள்,பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
மன்னார் மாவட்டத்தில். அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் மக்கள்,இரண்டு மூன்று தினங்களாக சமைத்து உண்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு சமைத்த உணவை வழங்கும்படி அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினரிடமும் பேசியுள்ளேன், மற்றும் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூறியிருக்கிறேன்,
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு,அவர்களின். குறைகளைக் கேட்டறிந்தபின், மக்களின் அவசரத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய, நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், தொலைபேசி வாயிலாகவும், கடிதமூலமாகவும் அறிவித்துள்ளேன் என அவர் மேலும்தெரிவித்தார்.