சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் தேர்தல் அன்றும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்துக்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாளைய தினம் 14/11/2024 வியாழக்கிழமை பிற்பகல் 4. 30 மணியிலிருந்து –15/11/2024 மறுநாள் மாலை 6.00 மணிவரை கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: RK JJ