2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 25ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 1,818 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த விபத்துகளில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 676 பேர் பாதசாரிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டில் 2,200 வீதி விபத்துக்களில் 2,557 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.