வயநாடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரியங்காவுக்கு ஆதரவாக அண்ணன் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தி தவிர்த்து வந்தார்.
பிரியங்கா காந்தியின் உரையைத் தொடர்ந்து பேச வந்த ராகுல் காந்தி,
“இக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக பேசுவது, குடும்ப உறுப்பினர்களுடனான உங்களுடன் சகஜமாக கலந்துரையாடுவது என இரண்டு சொய்ஸ் உள்ளன.
அதில் உங்களுடன் பேசுவதையே நான் தெரிவு செய்கிறேன்.
உங்களின் வேட்பாளரான பிரியங்காவைப் பற்றியே பேசுகிறேன்.
பிரதமர் மோடியைப் பற்றி ஏற்கனவே பிரியங்கா ஒருமுறை உரையாற்றிவிட்டார்.
எனவே அவரைப் பற்றி இன்னொரு தடவை இந்த மேடையில் பேசுவதற்கு அவசியம் இல்லை. எல்லோருக்கும் மோடி மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகவே மோடியைப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தொடர்ந்து தன் தந்தையான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியாகியுள்ள நளினியை பிரியங்கா நேரில் சென்று சிறையில் சந்தித்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டுக்கு இப்போது மன்னிக்கும் மனப்பாங்குள்ள அரசியல் தேவை என்பதை ராகுல் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.