காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வலகாகொட தெரிவித்தார்.
பிந்திய தகவலின் படி மேலும், இந்த பணிப்புறக்கணிப்பு சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட வைத்தியர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் பேரில் இந்தப் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.