அநுர அதிரடி! அரிசி விலையை ஸ்திரப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிற்றல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று  ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிற்றல் மயமாக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிற்றல் மயமாக்குதல் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம் என்பனவற்றை டிஜிற்றல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

https://www.facebook.com/share/v/pyrfXTRfrPkRgaAL/

Recommended For You

About the Author: S.R.KARAN