எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்: மகிழ்ச்சியில் கங்கனா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் எமர்ஜென்சி.

இத் திரைப்படத்தை கங்கனா ரணாவத் இயக்குவதோடு, அவரே நடித்தும் இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப் படத்தின் திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

கடந்த வருடம் இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் படம் ரிலீஸாவது தள்ளிப் போனது.

இந்நிலையில் தற்போது படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கங்கனா ரணாவத்.

Recommended For You

About the Author: admin