இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மாவை சேனாதிராசாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராசாவின் நலம் குறித்து கேட்டறிந்தார்.
கஜதீபன், மாவை சேனாதிராசாவை சந்தித்தபோது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் பிருந்தாபனும் உடனிருந்தார்.