தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என்றார். அப்போது, “தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு “மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்