ரி20 உலகக்கிண்ணம் கனடாவை வீழ்த்திய பாகிஸ்தான்

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (11) இடம்பெற்ற 22 ஆவது போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

நியூயோர்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை 08.00 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதற்குத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் 03 பந்துகள் நிறைவில் 03 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 107 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Recommended For You

About the Author: admin