பிரான்ஸில் எரிவாயு கட்டணம் அதிகரிக்குமென அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டணம் சராசரியாக 11.7 வீதம் அதிகரிக்குமென குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, ஜூலை மாதத்தில் பெறுமதி சேர் வரி உட்பட ஒரு மெகாவோட் மின்சாரத்திற்கான சராசரி கட்டணம் 129.2 யூரோவாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.7 யூரோக்கள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகித்தர்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான சுதந்திரம் காணப்படுவது கட்டண அதிகரிப்புக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோக வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள 10 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் பெரும்பாலானவர்களை பாதிக்குமென தேசிய எரிசக்தி ஒன்புட்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விநியோகத்தர்கள் செலுத்தும் வரியானது கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.