தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தெற்காசிய பிராந்தியத்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, டொனால்ட் லூ இன்று வெள்ளிக்கிழமை (10) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே அவரது பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இலங்கை வருகையின் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.