கிறிப்டோ கரன்சி சட்டரீதியானதல்ல – ஏமாற வேண்டாம்: இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் கிறிப்டோ கரன்சி (crypto currency) எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“கிறிப்டோ” என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது.

கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினாலன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும்.

‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது.

கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்கள் தாம் மேற்கொண்ட கிறிப்டோ முதலீடுகளின் மூலமாக பாரியளவில் நட்டங்களை சந்தித்துள்ளனர் என்றும் சில சந்தர்ப்பங்களில் கிறிப்டோவுடன் தொடர்புடைய திட்டங்க;டாக முன்னெடுக்கப்பட்ட நிதியியல் மோசடிகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கப்பெறுகின்ற அண்மைய முறைப்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த கிறிப்டோ நாணயம் ஆபத்தானது என மத்தியவங்கியால் வெளியிடப்பட்ட முந்தைய ஆவணங்கள் வருமாறு…👇

ut

hf

Recommended For You

About the Author: admin