இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகள் இன்று மோதல்

டி20 மகளிர் உலகக் கிண்ண தகுதி காண் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (27) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணிக்கு சாமரி அதபத்துவும், ஸ்கொட்லாந்து அணிக்கு கேத்ரின் பர்சியும் தலைமை தாங்குகின்றனர்.

A குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்கொட்லாந்து அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்தப் போட்டியில் இலங்கை அணி இதற்கு முன்னர் தாய்லாந்துக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தியிருந்தது.

இதனால் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin