விராட் கோலிக்கு எதிராக எழும் விமர்சனம்

‘இந்தியன் ப்ரீமியர் லீக்கில் மந்தமான சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி’ என பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களும் எக்ஸ் வலைத்தளத்தில் ‘selfish’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (06) ஜய்பூரில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதத்தை பதிவு செய்தார்.

ஆட்டமிழக்காமல் 72 பந்துகளில் 113 ஓட்டங்களை பெற்றார்.

மேலும், இந்த போட்டியில் சதத்தை பதிவு செய்ததன் மூலம் மூன்றாவது முறையாக 50 ஓட்டங்களை தாண்டி எடுத்துள்ளார்.

இதேவேளை, ஜய்பூர் மைதானத்தில் ஒன்பது தடவைகள் விளையாடி முதன்முறையாக 50 ஓட்டங்களை கடந்து அதனை சதமாக மாற்றியுள்ளார்.

நேற்றைய போட்டியில் 34 ஓட்டங்களை பூர்த்தி செய்தபோது இந்தியன் ப்ரீமியர் லீக்கில் 7500 ஓட்டங்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனைகளை விராட் கோலியின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சில கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin