கட்சியின் பெயரை மாற்றிய தளபதி விஜய்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழக வெற்றி கழகம்‘ என்ற கட்சியின் பெயரில் , ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில்,தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலாவது ஆலோசனைக் கூட்டத்திற்கும் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (19) காலை 9 மணிக்கு சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இடம்பெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin