அதீத தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றாற் போல பல தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் தற்போது உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.
அந்த வகையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024இல் இந்த AI தொழில்நுட்பத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால், பரப்பப்படும் தவறான தகவல்களினால் பெரும் பாதிப்பை உலகம் சந்திக்க நேரிடும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அடுத்த சகாப்தங்களில் உலக அரசியல், சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவற்றினால் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சைபர் குற்றங்களை பராமரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையானது தற்போது 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு உள்ளாகி பாரியளவு சரிவை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் இணைய சமத்துவமின்மை அதிகரித்தமையினால், அதனை முறையாக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என WEF அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக AI மற்றும் Generative AI போன்ற தொழில்நுட்பங்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
இதனால் சைபர் குற்றங்கள் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்பின் காரணமாக தேர்தல் செயல்முறைகளில்கூட குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புண்டு.
டிஜிட்டல் சாம்ராஜ்யம் பெருமளவில் உயர்ந்து வரும் நிலையில், AI துறையின் அபரிமிதமான வளர்ச்சியானது 2024ஆம் ஆண்டில் பெருமளவிலான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.