அவலோகிதேஸ்வர போதிசத்வாவுக்கு விளக்கமறியல்

கடவுளின் பிள்ளை என தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டு போதனைகளில் ஈடுபட்டுவந்த அவலோகிதேஸ்வர போதிசத்வா எனப்படும் மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவலோகிதேஸ்வர போதிசத்வா நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போதே அவரை ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

பௌத்த மதத்தை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாககவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே, அவலோகிதேஸ்வர போதிசத்வா, கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin