2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காவிடின் நாடு இன்று இருப்பதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தெஹிவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
”2015ஆம் ஆண்டு எனது வெற்றியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் ஆதரவை மீண்டும் பெற முடிந்தது.
ஊழல், மோசடி, திருட்டு, வீண் விரயம் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை நிரப்பிக்கொண்டு நாட்டை பாதாளத்திற்கு கொண்டு சென்ற ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.
எனது போட்டியாளரான மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் நாடு இன்று இருப்பதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் தற்போது செயற்பட்டு வருகிறோம்.” என்றார்