அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சுரேகா வாணி

நடிகை சுரேகா வாணி மொட்டை தலையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் விஜய்யுடன் மெர்சல், மாஸ்டர் மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் சுரேகா வாணி நடித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இவரின் கணவர் சுரேஷ் தேஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கணவரின் மறைவிற்கு பின்னர் தனது மகள் சுப்ரிதாவுடன் வாழ்ந்து வரும் சுரேகா வாணி நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் மொட்டை தலையுடன் சுரேகா வாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அண்மையில் பாதை யாத்திரையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மொட்டை அடித்து சுரேகா வாணி தனது நேர்த்தி கடனை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Recommended For You

About the Author: admin