மருந்துக் கொள்வனவில் ஊழல் கெஹெலியவுக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஊழல்கள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: admin