அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய வழக்கு: முன்னாள் அமைச்சர் பௌசி பகிரங்க மன்னிப்பு
முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒக்டோபர் 24ஆம் திகதி சிங்கள அரச பத்திரிகையில் மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்காக வழங்கிய வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1)ஆம் பிரிவின் கீழான அடிப்படை உரிமையை அவர் மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அரசின் திரட்டு நிதிக்கு 66 இலட்சம் ரூபாவைச் செலுத்தவும், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மன்னிப்பு கோரவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

