ஈரானைத் தாக்கத் தயார் நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்

ஈரானைத் தாக்கத் தயார் நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்: ட்ரம்பின் அறிவிப்பால் உலகளவில் பரபரப்பு!

ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு தவறினால், மீண்டும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்காக அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனிடையே, லெபனான், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிலிருந்து சில அமெரிக்க இராஜ தந்திரப் பணியாளர்கள் வெளியேற்றப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எதிர்வரும் 27 ஆம் திகதி ரஷ்யாவுக்குச் சென்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Recommended For You

About the Author: admin