3 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இரத்து – மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு!

3 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இரத்து – மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலின்போது, மூன்று வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளைச் செல்லாதவையாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின்போது, ஆக்ராவில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடர்பாக முறைகேடு குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, குறித்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை இரத்துச் செய்து, மீண்டும் வாக்குப்பதிவு நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

வாக்குப்பதிவு மையங்களில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin