மாத்தறை தலல்ல கடற்கரையில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பல மூடைகள் மீட்பு!
மாத்தறை, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பல மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்படையினரும் இணைந்து இன்று (24) காலை முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின்போதே இந்த மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும், மீட்கப்பட்ட மூடைகளில் போதைப்பொருட்கள் உள்ளனவா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அவை போதைப்பொருட்களாக இருப்பின், அவற்றின் வகை மற்றும் மொத்த எடை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

