சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை

செங்கடலில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சற்று முன்னர் வரை ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.16 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து அல்லது 4.1 சதவீதம் உயர்ந்து 80.57 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 3.05 அமெரிக்க டொலர்கள் அல்லது 4.2 சதவீதம் உயர்ந்து 75.07 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

ஈரான் ஆதரவுக் குழுவின் செங்கடல் மூலமான கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்குப் பின்னர், யேமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஒரே இரவில் விமானம் மற்றும் கடல் மார்க்காமன தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் இருந்து திசை திரும்பியதால் இந்த விலை ஏற்றம் வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin