செங்கடல் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை

காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒன்றிணைந்து தாக்கதல் நடத்தி வருகின்றன. இந்நிலையிலேயே காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கம் வகையில் ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

இதுவரையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 27 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஏமன் தலைநகர் சானா, சாதா மற்றும் தாமர் உள்ளிட்ட நகரங்களில் இத்தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

பத்திற்கும் அதிகமாக இலக்குகளை அமெரிக்க-பிரித்தானியா படைகள் குறி வைத்திருக்கின்றன என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வரை நாங்கள் செங்கடல் பகுதியில் தாக்குதலை தொடர்வோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஹவுதி தலைமை செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் தெரிவிக்கையில்,

“ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்த சமீபத்திய தீர்மானம் மேற்கத்திய நாடுகளின் பொய்களால் நிரம்பியுள்ளது. கஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதல் நீடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதி கடல் வணிகத்தில் மிக முக்கியமான பாதையாகும். மேலும் இது ஐரோப்பியாவையும், ஆசியாவையும் இணைக்கும் ஒரு குறுக்கு பாதையாகும்.

எனவே ஏற்றுமதி, இறக்குமதிக்கு இந்த பாதை சுலபமானதாக இருக்கிறது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய – ஐரோப்பியத்தின் 12 வீத வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆனால் சமீப நாட்களாக இந்த கடல் பாதையில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin